
ஜெம் வீரமணி வழக்கு - மூவரின் ஜாமின் தள்ளுபடி
ஜெம் வீரமணி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகியுள்ள சாந்தி, மகேந்திர சிம்மன், கணேசன் ஆகியோரது ஜாமின் மனுக்களை சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. விசாரணை ஆரம்ப நிலையில் இருப்பதால் ஜாமின் வழங்கக்கூடாது என்ற காவல்துறையின் வாதத்தை ஏற்று நிதிபதி எஸ்.பத்மா உத்தரவு பிறப்பித்தார். வீரமணிக்கு எதிராக இதுவரை 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கை ஐபிஎஸ் அதிகாரி தேன்மொழி தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது.




