தமிழகத்தில் தொடர் மழை காரணமாக காய்கறிகளின் விலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக, சின்ன வெங்காயத்தின் விலை இருமடங்காக அதிகரித்துள்ளது. ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், பூண்டு கிலோ ரூ.240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மழையால் சாகுபடி பாதிக்கப்பட்டு, சந்தைக்கு வரத்து குறைந்ததே விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. புதிய விளைச்சல் சந்தைக்கு வருவதற்கு காலதாமதம் ஏற்படுவதால், அடுத்த சில நாட்களுக்கும் விலை உயர்வு நீடிக்கலாம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.