சென்னை கோயம்பேடு சந்தைக்கு காய்கறி வரத்து குறைந்துள்ளதால், சில்லறை விற்பனையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.250 வரை விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கனமழையால் காய்கறி விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். பெரிய வெங்காயம், பீன்ஸ், அவரைக்காய் மற்றும் முருங்கைக்காய் என அனைத்து காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளதால் நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களின் பட்ஜெட் பாதிக்கப்பட்டுள்ளது. காய்கறி வரத்து அதிகரித்தால் மட்டுமே விலை குறையும்.