ஸ்மார்ட்போன்களின் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. சாம்சங், சியோமி நிறுவனங்கள் தங்கள் 41 மாடல் போன்களின் விலையை 18.75% வரை உயர்த்தி உள்ளன. இதில் சாம்சங்கின் 22 மாடல்களும், சியோமியின் 19 மாடல்களும் அடங்கும். இதன்படி, மாடல்களைப் பொறுத்து விலை ரூ.1,000 முதல் ரூ.4,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. மெமரி உதிரிபாகங்கள், மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பே இந்த விலை உயர்வுக்கு காரணம் என்று அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மேலும் ஒப்போ, விவோ, ரியல்மி நிறுவனங்களும் விலையை உயர்த்த வாய்ப்புள்ளது.