தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

19பார்த்தது
தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்க நவம்பர் 5-ல் இரவு 11.50-க்கு எழும்பூர் - கன்னியாகுமரி ரயிலும், நவம்பர் 7-ல் காலை 5 மணிக்குத் தாம்பரம் - தென்காசி ரயிலும் இயக்கப்பட உள்ளன. மறுமார்க்கத்தில், நவம்பர் 9 அன்று இரவு 11.20-க்குக் கன்னியாகுமரி - எழும்பூர் சிறப்பு ரயிலும், அதே நாளில் மதியம் 3 மணிக்குச் செங்கோட்டை - தாம்பரம் சிறப்பு ரயிலும் இயக்கப்பட உள்ளதாகத் தெற்கு ரயில்வே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி