தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

14பார்த்தது
தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, தாம்பரத்தில் இருந்து நாகர்கோயிலுக்கு 2 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன்படி, நவ.6-ம் தேதி இரவு 11:55 மணிக்கும், நவ.7-ம் தேதி பிற்பகல் 3:30 மணிக்கும் தாம்பரத்தில் இருந்து நாகர்கோயிலை நோக்கி இந்தச் சிறப்பு ரயில்கள் புறப்பட்டு செல்லும். இச்சிறப்பு ரயில்களுக்கான பயணச் சீட்டு முன்பதிவு நாளை (அக்.29) காலை 8 மணி முதல் தொடங்கும் எனத் தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி