திருவண்ணாமலைக்கு நவ.23 முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்

14பார்த்தது
திருவண்ணாமலைக்கு நவ.23 முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்
தீபத்திருநாளையொட்டி, திருவண்ணாமலைக்குச் செல்லும் பக்தர்களின் வசதிக்காக நவம்பர் 23ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன்படி, சென்னை கடற்கரை மற்றும் தாம்பரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும், விழுப்புரம் மற்றும் காட்பாடியில் இருந்தும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. தீபத்திருநாளை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்பதால், இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி