ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 9 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். 5 நாட்களுக்கு முன்பு இதேபோல் என்ஜின் பழுதாகி இலங்கை பகுதி கரை ஒதுங்கிய 11 மீனவர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், மேலும் 9 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதால் மீனவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.