2017-ல்
நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரி
திமுக சார்பில் மாநிலம் முழுவதும் மனிதச் சங்கிலிப்
போராட்டம் நடத்தப்படும் என
மு.க.ஸ்டாலின் அறிவித்தார். 2018-ல் இந்தி திணிப்புக்கு எதிராக 1965-ம் ஆண்டு
போராட்டம் மீண்டும் வெடிக்கும் என எச்சரித்தார். 2019-ல் புதிய கல்விக் கொள்கையில் இந்தி கட்டாயம் குறித்த விவகாரத்தில் மத்திய அரசிடம் விளக்கம் கோரினார். 2022-ல்
நீட் விலக்குக்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி சட்டப் போராட்டத்துக்கும் வலியுறுத்தினார்.