வங்கக்கடலில் நிலவும் வானிலை மாற்றங்கள் மற்றும் தொடர் மழை காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 9 முக்கிய துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, பாம்பன், தூத்துக்குடி மற்றும் புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் இந்த எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு, கடலுக்குச் செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.