தமிழ் மொழி பயிற்று மொழியாக இல்லாமல் பொறியியல் டிப்ளமா படிப்பில் தமிழ்வழி சான்றிதழ் வழங்கும் பாலிடெக்னிக் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தொழில்நுட்பக் கல்வி ஆணையர் டி.ஆபிரகாம் தெரிவித்துள்ளார். இது குறித்தான உத்தரவில், தொழில்நுட்பக் கல்வித்துறையின் டிப்ளமா படிப்பு தொடர்பான விதிமுறைகளின்படி, பயிற்று மொழி ஆங்கிலம் மட்டுமே. இதை மீறி தமிழ் வழிச் சான்றிதழ் வழங்கும் பாலிடெக்னிக் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.