சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் வகையில், ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நட்சத்திர வீராங்கனை துளசிமதி முருகேசன் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் சீன வீராங்கனையிடம் போராடி தோல்வியடைந்ததை அடுத்து, அவருக்கு இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெள்ளிப் பதக்கமானது கிடைத்தது.