தமிழக அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை உபகரணங்கள், வேதிப்பொருட்கள் தட்டுப்பாட்டை போக்க தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் மூலம் புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனி ஏழை நோயாளிகள் தனியார் ஆய்வகங்களை நாட வேண்டிய அவசியம் இருக்காது. அரசு மருத்துவக் கல்லூரி, மாவட்ட, தாலுகா மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குத் தேவையான 2 வருடத்திற்கான உபகரணங்களை ஒரே நேரத்தில் வாங்க அரசு டெண்டர் கோரியுள்ளது. ரத்தம், சர்க்கரை, டெங்கு உள்ளிட்ட பரிசோதனைகள் 100% இலவசமாக கிடைக்க உறுதி செய்யப்பட்டுள்ளது.