
3 நாட்கள் வங்கி வேலைநிறுத்தம்: எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கவனம்
வாரம் 5 நாட்கள் வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு (UFBU) வரும் செப்.28-30 வரை அகில இந்திய வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதனால் வங்கி சேவைகள் பாதிக்கப்படுவதை தடுக்க, மத்திய நிதியமைச்சகம் நாளை (செப்.21) பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தவுள்ளது. இக்காலகட்டத்தில் வங்கி கிளைகளுக்கு செல்வதைத் தவிர்த்து, ATM, YUNO செயலி மற்றும் UPI போன்ற டிஜிட்டல் முறைகளை பயன்படுத்துமாறு SBI வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.





























