
ரூ.900 இஎம்ஐ-யில் வீட்டில் சோலார் அமைக்கும் மத்திய அரசு திட்டம்
மாதாந்திர மின்சார கட்டணத்தை குறைக்கும் நோக்கில், சோலார் பேனல்கள் அமைக்க மத்திய அரசு 'பிஎம் சூர்யா கர்' திட்டத்தின் கீழ் மானியம் மற்றும் கடன்களை வழங்குகிறது. இத்திட்டத்தின் மூலம் 1 கிலோவாட் திறன் கொண்ட சோலார் அமைப்பை மாதம் ரூ.827 முதல் EMI செலுத்தி மின்சார உற்பத்தி சாதனங்களை பெற முடியும். இதற்காக அரசு வழங்கும் ரூ.30,000 முதல் ரூ.78,000 வரையிலான மானியம் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுவதால், பொதுமக்கள் அதிக அளவில் இத்திட்டத்தில் இணைந்து பயனடைந்து வருகின்றனர்.


































