
தஞ்சையில் நாய்கள் தொல்லை: பொதுமக்கள் அவதி
தஞ்சாவூர் மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளிலும் தெரு நாய்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகளையும், பள்ளி மாணவர்களையும் நாய்கள் துரத்தி வருவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, தெரு நாய்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.














