நகைக்கொள்ளை வழக்கில் தவெக நிர்வாகி அதிரடியாகக் கைது

7பார்த்தது
நகைக்கொள்ளை வழக்கில் தவெக நிர்வாகி அதிரடியாகக் கைது
நெல்லை பகுதியில் 70 வயது மூதாட்டியின் வீட்டில் புகுந்து 13 பவுன் தங்க நகைகளைக் கொள்ளையடித்த வழக்கில், தமிழக வெற்றிக் கழக நிர்வாகி இசக்கிராஜா என்பவரைப் போலீசார் கைது செய்தனர். அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அவரைக் கைது செய்த தனிப்படையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனையடுத்து, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இசக்கிராஜா அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி