ஊழலற்ற ஆட்சி அமைக்க வேண்டும் என்று
தளபதி கூறிய நிலையில், உத்திரமேரூரில் ஊழல் மட்டுமே நடப்பதாகக் கூறி தவெக எம்.எல்.ஏ முனிரத்தினத்திற்கு எதிராக அக்கட்சியினரே சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவருக்கு எதிராகக் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டதால் பரபரப்பு நிலவியது. சொந்த எம்.எல்.ஏவுக்கு எதிராகவே தொண்டர்கள் போராட்டத்தில் குதித்துள்ளது தவெகவில் உட்கட்சிப் பூசல் வெடித்துள்ளதைக் காட்டுவதாகக் கூறப்படுகிறது.
நன்றி: சன் நியூஸ்