மனிதர்கள் வசிக்காத உலகின் மிகப்பெரிய தீவு

0பார்த்தது
மனிதர்கள் வசிக்காத உலகின் மிகப்பெரிய தீவு
கனடாவில் உயர் ஆர்டிக் (High Arctic) பகுதியில் அமைந்துள்ள ‘டெவோன் தீவு’ (Devon Island) உலகின் மிகப் பெரிய மனிதர்கள் வசிக்காத தீவாக அறியப்படுகிறது. சுமார் 55,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இத்தீவு, அதன் தீவிரமான குளிர்காலம் மற்றும் செவ்வாய் கிரகத்தை ஒத்த கரடுமுரடான நிலப்பரப்பிற்குப் பெயர் பெற்றதாகும். மனித நடமாட்டமற்ற இத்தீவின் தனித்துவமான சூழல் காரணமாக, அறிவியலாளர்கள் செவ்வாய் கிரக ஆராய்ச்சி தொடர்பான சோதனைகளை மேற்கொள்ளும் முக்கியக் களமாக இது விளங்குகிறது.

தொடர்புடைய செய்தி