
அண்ணாமலை இயக்கத்தில் இருந்து விலகி மீண்டும் பாஜகவில் ஐக்கியம்
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை இயக்கத்தில் சேர்ந்தவர் தற்போது மீண்டும் பாஜகவிலேயே இணைந்துள்ளார். மத்திய சென்னை மேற்கு மாவட்ட பாஜகவின் எழும்பூர் மேற்கு மண்டல் தலைவராகப் பணியாற்றிய எஸ்.பிரபு, அண்ணாமலையின் "WE THE LEADERS" அமைப்பில் இணைந்திருந்தார். இன்று அவர் மீண்டும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்த நிகழ்வில் மாநிலத் துணைத் தலைவர் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தார்.































