
சொத்து வரி செலுத்த இன்று கடைசி நாள்
சென்னையில் சொத்து வரி மற்றும் தொழில் வரியை செலுத்த இன்று (செப்.30) கடைசி நாள் என பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட சொத்து உரிமையாளர்கள், மாநகராட்சியின் இணையதளம் www.chennaicorporation.gov.in அல்லது 94450 61913 என்ற வாட்ஸ்அப் எண் மூலம் தங்களது வரியினை செலுத்தலாம். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வரியை செலுத்தாவிட்டால், நிலுவை தொகைக்கு மாதத்திற்கு 1 சதவீதம் வீதம் அபராத வட்டி வசூலிக்கப்படும் என மாநகராட்சி தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.




