
பெண்களுக்கு தலா ரூ.200-க்கான டோக்கன் விநியோகம் என புகார்
இடைத்தேர்தல் நடைபெற உள்ள தாராபுரம் தொகுதியில் திமுகவினர் சார்பில் பெண்களுக்கு தலா ரூ.200-க்கான டோக்கன் விநியோகம் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. திமுக பரப்புரைக்கு அழைத்து வரப்படும் பெண்களுக்கு 2 நிறங்களில் டோக்கன் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பரப்புரை முடிந்த பிறகு பெண்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக தவெக குற்றம்சாட்டியுள்ளது. நாளை முதலமைச்சர் விஜய் தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து தாராபுரத்தில் பரப்புரை மேற்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.




