
வளைகாப்பு விழாவில் 7 வகையான சீமந்த உணவு பரிமாறிய அமைச்சர்
சமுதாய வளைகாப்பு விழாவில் பங்கேற்ற அமைச்சர் என்.ஆனந்த், கர்ப்பிணி பெண்களுக்கு ஏழு வகையான சீமந்த உணவுகளை பரிமாறினார். சென்னை சர். பிட்டி தியாகராயா கலையரங்கத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவுக்கு அமைச்சர் தலைமை தாங்கினார். தொடர்ந்து கர்ப்பிணிகளுக்கு எலுமிச்சை, தயிர், புளி சாதம், பொங்கல், தேங்காய் சாதம் என 7 வகையான உணவுகளை பரிமாறியதோடு, அவரும் உணவு அருந்தினார்.































