
தாக்குதல் வழக்கு: குற்றவாளிக்கு 6 மாதம் சிறை
முன்னீர்பள்ளம் அருகே முன்விரோதம் காரணமாக கிருஷ்ணன் என்பவரை வெள்ளபாண்டி மற்றும் அவரது மனைவி தாக்கிய வழக்கில், நெல்லை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. வெள்ளபாண்டிக்கு 6 மாத சிறை தண்டனையும், ரூ. 500 அபராதமும், அவரது மனைவிக்கு ரூ. 500 அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த சம்பவம் 2023 ஆம் ஆண்டு நடைபெற்றது.















