திருப்பரங்குன்றம் மலையில் நடைபெறும் தீபம் ஏற்றும் நிகழ்வை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் மலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சிவப்பு மண்டலமாக மதுரை மாநகரக் காவல்துறை அறிவித்துள்ளது. இந்த கட்டுப்பாட்டின் காரணமாக அப்பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தீபத் திருவிழாவின் போது பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கைப் பேணும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.