
புலம்பெயர் தொழிலாளர்களை ரூ. 8500க்கு விற்ற ஓட்டுநர்கள் கைது
வடமாநிலங்களில் இருந்து சென்னைக்கு வேலை தேடி வந்த 5 புலம்பெயர் தொழிலாளர்களை, அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு அழைத்துச் செல்லாமல் வேறு இடத்திற்கு அழைத்துச் சென்று ₹7500 கேட்டு மிரட்டிய ஆட்டோ ஓட்டுநர்கள் நால்வர் கைது செய்யப்பட்டனர். பணம் தராததால், அம்பத்தூரில் உள்ள வேலைக்கு ஆள் சேர்க்கும் ஏஜென்சியில் அந்த 5 பேரையும் விட்டுவிட்டு, ₹8500 பெற்றுக்கொண்டு சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






















