மாதவரம் - Madhavaram

200கிலோ குட்கா கடத்திய கார் பறிமுதல்

200கிலோ குட்கா கடத்திய கார் பறிமுதல்

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வழியாக குட்கா கடத்தப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் ஆற்காடு குப்பம் பகுதியில் வாகன சோதனை நடத்தப்பட்டது. இதில், திருத்தணி பகுதியிலிருந்து சென்னை நோக்கி சென்ற காரை சோதனையிட்டபோது, 200 கிலோ குட்கா கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, குட்காவை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சங்காராம் (28) என்பவரை கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

కొమరంభీం జిల్లా