
திருவொற்றியூர்: கடலில் மாயமான மாணவர் சடலம் கரை ஒதுங்கியது
ராயபுரம், ஆட்டுத்தொட்டி பகுதியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர் சந்தோஷ் (18), நேற்று மாலை நண்பர்களுடன் திருவொற்றியூர் பாப்புலர் எடை மேடை அருகே கடலில் குளித்தார். அப்போது ராட்சத அலையில் சிக்கி சந்தோஷ் மாயமானார். மீனவர்கள் தினேஷ் அஜயை மீட்டனர். தீயணைப்பு வீரர்கள் தேடுதல் நடத்தியும் இருள் காரணமாக நிறுத்தப்பட்டது. இன்று காலை சந்தோஷின் சடலம் கரை ஒதுங்கியது.






















