
சேரன்குளம் ஆள்காட்டி அம்மன் கோவில் பால்குட திருவிழா
மன்னார்குடி அருகே சேரன்குளம் கிராமத்தில் உள்ள பழமையான ஸ்ரீ ஆட்காட்டி அம்மன் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆனி திருவிழாவில், சிறப்பு அபிஷேக ஆராதனைகளுக்குப் பிறகு, பக்தர்கள் பால்குடம், காவடி, செடில் சுமந்து ஊர்வலமாக வந்தனர். பல்லாயிரம் லிட்டர் பால் கொண்டு அம்மனுக்கு பாலபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.







