
அதிக விலைக்கு மின்கொள்முதல்: தவெக செய்தித் தொடர்பாளர் பதிவால் சர்ச்சை!
தமிழகத்தில் மின்தேவை 20,000 மெகாவாட்டைத் தாண்டிய நிலையில், அவசரத் தேவைக்காக தமிழ்நாடு மின்சார பகிர்மான கழகம் யூனிட்டுக்கு ₹35 முதல் ₹37 வரை கொடுத்து மின்சாரம் வாங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திட்டமிடல் குறைபாட்டால் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறதா என்ற விமர்சனம் எழுந்துள்ள சூழலில், தவெக செய்தித் தொடர்பாளர் அனந்தஜித் மின்துறை அமைச்சர் நிர்மல் குமாரை டேக் செய்து கேள்வி எழுப்பிய பதிவை உடனே நீக்கியது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.






























