
லாட்ஜில் இளம்பெண் சடலம்.. கணவருக்கு போலீஸ் வலை
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள தனியார் லாட்ஜில் 23 வயது வித்யா சடலமாக மீட்கப்பட்டார். அவருக்கும் ஆனந்த் என்பவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்து, ஒரு மகன் உள்ளார். சம்பவத்தன்று தம்பதி ஒன்றாக லாட்ஜில் தங்கிய நிலையில், இளம்பெண் இறந்துகிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து, உடலை மீட்ட போலீசார், மாயமான கணவரை போலீசார் தேடி வருகின்றனர். பிரேதப் பரிசோதனை அறிக்கைக்குப் பிறகே மரணத்திற்கான காரணம் உறுதி செய்யப்படும். நன்றி: HateDetectors




























