
தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி CJP போராட்டம்
மும்பை சிவாஜி பூங்கா பகுதியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. போராட்டத்தில் பங்கேற்பதற்காக அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவாஜி பூங்கா பகுதியில் போராட்டம் நடைபெறுவதையொட்டி போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


























