செங்கம் - Chengam

திருவண்ணாமலை
தடகள வீரர்கள் விஷால் மற்றும் ராஜேஷ்-க்கு தலா ரூ.30 லட்சம் பரிசு
Sep 29, 2026, 15:09 IST/

தடகள வீரர்கள் விஷால் மற்றும் ராஜேஷ்-க்கு தலா ரூ.30 லட்சம் பரிசு

Sep 29, 2026, 15:09 IST
ஜப்பான் நாட்டில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தடகளம் ஆண்கள் 4x400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீரர்கள் விஷால், ராஜேஷ் ஆகியோருக்கு தலா ரூ.30 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், இவர்களது விடாமுயற்சியும், அர்ப்பணிப்பும், குழு ஒருங்கிணைப்பும் வெற்றியை நோக்கி பயணிக்கும் இளைய தலைமுறையினருக்கு நம்பிக்கையையும், உத்வேகத்தையும் அளிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.