
வந்தவாசி: வரப்பு தகராறில் விவசாயிக்கு எலும்பு முறிவு
வந்தவாசி அடுத்த ஆலத்தூர் கிராமத்தில் கடந்த 2 ஆம் தேதி வரப்பு தகராறு காரணமாக விவசாயி நரசிம்மன் (42) என்பவரை அதே பகுதியை சேர்ந்த தங்கராஜ் தாக்கியுள்ளார். இதில் நரசிம்மனுக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. காயமடைந்த நரசிம்மன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கீழ்கொடுங்காலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள தங்கராஜை தேடி வருகின்றனர்.





