
டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சு பயிற்சியாளராக அமித் மிஸ்ரா நியமனம்
IPL கிரிக்கெட் வரலாற்றில் 3 முறை ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த இந்தியாவின் Ex. சுழற்பந்துவீச்சாளரான அமித் மிஸ்ரா, டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் புதிய சுழற்பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2025-ம் ஆண்டு அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்ற அமித் மிஸ்ரா, IPL தொடரில் பல்வேறு அணிகளுக்காக விளையாடி 174 விக்கெட்டுகளை கைப்பற்றிய அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.




