வந்தவாசி - Vandavasi

திருவாரூர்
முதியோர் ஓய்வூதியத்திற்கு ஆதார் இணைப்பு.. சிபிஎம் வலியுறுத்தல்
Sep 28, 2026, 14:09 IST/

முதியோர் ஓய்வூதியத்திற்கு ஆதார் இணைப்பு.. சிபிஎம் வலியுறுத்தல்

Sep 28, 2026, 14:09 IST
முதியோர் ஓய்வூதியத்திற்கு ஆதார் இணைப்பு நிபந்தனையை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார். அவரது அறிக்கையில், முதியோர் ஓய்வூதியத்தை ஆதார் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் மட்டுமே செலுத்த வேண்டும் என அரசு வலியுறுத்துவதால், பல மூத்த குடிமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். வங்கிக் கணக்குகள், பெயர்களில் உள்ள வேறுபாடுகள் காரணமாக பல்லாயிரக்கணக்கானோருக்கு ஓய்வூதியம் தடைபட்டுள்ளது. ஆதார் இணைக்கப்படுவதை கட்டாயம் ஆக்க கூடாது என வலியுறுத்தியுள்ளார்.