செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழியில் சிக்னல் கோளாறு காரணமாக ரயில்கள் பாதி வழியில் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தென் மாவட்டங்கள் செல்லும் ரயில்களும், சென்னைக்கு வரும் ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.