அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 548 மரண தண்டனைக் கைதிகளின் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க ஆளுநர் கவின் நியூசம் முடிவெடுத்துள்ளார். இதற்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த முடிவால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி மறுக்கப்படுவதாகக் குற்றம்சாட்டிய அவர், குழந்தைகளைக் கொலை செய்பவர்கள் மற்றும் பாலியல் வன்கொடுமை அல்லது கடத்தலின்போது கொலை செய்பவர்களுக்கு மரண தண்டனை கோர நீதித்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.