தேனி சிறையிலிருந்து தப்பியோடிய இருவர் பிடிபட்டனர். அமச்சியாபுரம் மலைப்பகுதியில் பதுங்கியிருந்த கன்னியாகுமரியைச் சேர்ந்த ரெஜின், மதுரையைச் சேர்ந்த பொன் முத்து செல்வம் ஆகியோரை போலீசார் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். தேனி சிறையிலிருந்து தப்பியோடிய மொத்தம் 17 கைதிகளில் இதுவரை 15 பேர் பிடிபட்டுள்ள நிலையில், காடுகளில் தலைமறைவாக உள்ள எஞ்சிய இரண்டு நபர்களைப் பிடிக்க காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.