அமெரிக்காவின் மியாமி விமான நிலையத்தில் ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த இரண்டு விமானங்கள் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 166 பயணிகளை ஏற்றிச் சென்ற போயிங் விமானத்தின் இறக்கை, அங்கு சென்றுகொண்டிருந்த சரக்கு விமானத்தின் முன்பகுதியில் மோதியது. இந்த விபத்தில் இரண்டு பேர் காயமடைந்தனர். உடனடியாக மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். விமான நிலையத்தில் ஏற்பட்ட இந்தச் சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.