அமெரிக்காவில் டாஸ் போட்டு தேர்தல் வெற்றியாளர் தேர்வு

54பார்த்தது
அமெரிக்காவில் டாஸ் போட்டு தேர்தல் வெற்றியாளர் தேர்வு
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இரு பெண் வேட்பாளர்கள் சமமான வாக்குகளைப் பெற்றதால், டாஸ் போட்டு வெற்றியாளர் தேர்வு செய்யப்பட்டார். அட்லாண்டிக் பீச் நகர கமிஷன் தேர்தலில் ஜெனிபர் லாக்னர் மற்றும் லிசா ஹெரால்ட் ஆகியோர் சம வாக்குகளைப் பெற்றனர். இதையடுத்து புளோரிடா மாநில சட்டப்படி டாஸ் போடப்பட்டு, அதில் ஜெனிபர் லாக்னர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். தேர்தலில் சம வாக்குகள் கிடைத்தால் டாஸ் மூலம் முடிவைத் தீர்மானிக்க அங்கு சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி