அமெரிக்க கடற்படையின் அதிநவீன விமானம் தாங்கி போர்க்கப்பலான 'ஆபிரகாம் லிங்கன்' தாய்லாந்தின் பட்டாயா துறைமுகத்திலிருந்து தனது அடுத்தகட்ட பயணத்தை மீண்டும் தொடங்கியுள்ளது. சுமார் 5,000 மாலுமிகள் மற்றும் கடற்படை வீரர்களுடன் வந்திறங்கிய இக்கப்பல், பிரபல சுற்றுலா நகரமான பட்டாயாவில் 5 நாட்கள் தங்கி மாலுமிகளின் ஓய்வுக்கு பின் புறப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக கடற்பயணத்தில் ஈடுபட்டிருந்த அமெரிக்க வீரர்களுக்கு இந்த 5 நாள் இடைவேளை பெரும் புத்துணர்ச்சியை அளித்துள்ளதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.