தேனி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் வைகை அணை நீர்மட்டம் 42 அடியாக உயர்ந்துள்ளது. ஆண்டிப்பட்டி அருகே அமைந்துள்ள இந்த அணை, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் குடிநீர், பாசன தேவைகளுக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது. தென்மேற்கு பருவமழை கைகொடுக்காததால் நீர்மட்டம் சரிந்த நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் நீர்வரத்து வினாடிக்கு 406 கனஅடியாக அதிகரித்துள்ளது. தற்போது அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 86 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.