
முதியவரை தூக்கிச் சென்று சாலையை கடந்த காவலர்.. நெகிழ்ச்சி வீடியோ
கேரளம் மாநிலம் வயநாடு அருகே சாலையைக் கடக்க முடியாமல் தவித்த முதியவருக்கு காவலர் ஒருவர் உதவிய சம்பவம் காண்போரை நெகிழ வைத்துள்ளது. சாலையோரத்தில் நின்றிருந்த முதியவரால் போக்குவரத்து நெரிசல் காரணமாக சாலையை கடக்க முடியவில்லை. இதை கவனித்த காவலர், உடனடியாக முதியவரை தனது கைகளில் தூக்கிக்கொண்டு சாலையின் மறுபுறம் பாதுகாப்பாக அழைத்துச் சென்றார். பின்னர் அவரை பத்திரமாக கீழே இறக்கிவிட்டார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. நன்றி: PT

























