
குடியாத்தம் அருகே கஞ்சா பறிமுதல்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரயில்வே மேம்பாலம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சின்னப்பாண்டி என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து நான்கு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.















