
வேலூர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
வேலூர் சத்துவாச்சாரி ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இன்று (ஜூன் 29) மதியத்திற்குள் வெடிகுண்டு வெடிக்கும் என அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து, மோப்ப நாய் ரீட்டா உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு நிபுணர் குழுவினர் நீதிமன்ற வளாகத்தில் தீவிர சோதனை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக சத்துவாச்சாரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

















