
“திமுகவின் கடைசி ஆயுதம் ஆபாசம் தான்”.. அமைச்சர் நிர்மல் குமார்
தவெக அமைச்சரின் பிறப்பு குறித்து அவதூறாகவும், அநாகரிகமாகவும் பேசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் திமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆ.ராசா எம்பி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுகுறித்து அமைச்சர் நிர்மல் குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், “30 வருடமாக மிசா, முரசொலி பஞ்சமி நிலம் என சர்ச்சையாக இருப்பது ஏன்?. கேட்கும் கேள்விகளுக்கு பதில் இல்லை என்றால் திமுகவினரின் கடைசி ஆயுதம் ஆபாசமாக தான் உள்ளது” என்றார். நன்றி: பாலிமர்
















