நடிகர் தனுஷை வைத்து கேப்டன் மில்லர் படத்தை இயக்கும் அருண் மாதேஸ்வரன் அடுத்து
விஜய் தேவரகொண்டாவுடன் இணைய உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேப்டன் மில்லர் தொடங்குவதற்கு முன்பே
விஜய் தேவரகொண்டாவை வைத்து படம் இயக்க முடிவாகி விட்டதாம். ஆனால், கேப்டன் மில்லர் திரைப்படம் காரணமாக இவர்கள் இணைவது தள்ளிபோனது என்று கூறப்படுகிறது.