
விழுப்புரம்: தீ விபத்து.. மூதாட்டி பலி
விழுப்புரம் மாவட்டம், சின்னகோட்டக்குப்பம் பகுதியைச் சேர்ந்த 87 வயது மூதாட்டி கி. லட்சுமி, வியாழக்கிழமை வீட்டில் விளக்கிலிருந்து சேலையில் தீப்பற்றியதில் பலத்த காயமடைந்து புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














