
விழுப்புரம்: அரசுப் பேருந்து மோதி ஐடி ஊழியர் பலி
சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த புதுச்சேரி லாஸ்பேட்டையைச் சேர்ந்த ஜெகதீஷ் (22), விடுமுறைக்காக பைக்கில் சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தார். மரக்காணம் அருகே கூனிமேடு பஸ் நிறுத்தம் அருகே எதிரே வந்த அரசு பேருந்து மோதியதில் படுகாயமடைந்த அவர், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். மரக்காணம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














